LET GOD
“We have the Lord our God to help us and to fight our battles for us.” 2Chronicles32:8. Do we truly understand how to let God fight our battles? If youre going to let the Lord fight for you, you must completely submit to Him. Our battles may be spiritual, physical, or mental. But knowing that God fights for us should bring calm and peace in the midst of them. He rules over it all—our worries, fears, sickness, enemies, and sin—and yes, He helps us fight even our messiest battles. Let His strength help you overcome all your struggles. For Prayer-9176844644
கர்த்தரை அனுமதியுங்கள்
“நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்.” 2நாளாகமம்32:8. கர்த்தர் நம் யுத்தங்களை செய்ய அனுமதிப்பதை நாம் உண்மையிலேயே புரிந்து கொள்ளுகிறோமா? உங்களுக்காக யுத்தம் செய்ய கர்த்தரை அனுமதிக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் அவருக்கு முழுமையாக கீழ்ப்படிய வேண்டும். நம்முடைய யுத்தங்கள் ஆவிக்குரிய, சரீர அல்லது மன ரீதியாக இருக்கலாம். ஆனால் கர்த்தர் நமக்காக யுத்தம் செய்கிறார் என்பது அவற்றின் மத்தியில் அமைதியையும், சமாதானத்தையும் கொண்டு வரவேண்டும். அவர் அவை எல்லாவற்றின் மேலும்—நம்முடைய கவலைகள், பயங்கள், வியாதி, சத்துருக்கள் மற்றும் பாவம்—எல்லாவற்றின் மேலும் ஆளுகை செய்கிறார்; மேலும் மிகவும் குழப்பமான யுத்தங்களையும் நாம் மேற்கொள்ள அவர் உதவி செய்கிறார். உங்களுடைய எல்லா போராட்டங்களையும் மேற்கொள்ள அவருடைய பெலன் உங்களுக்கு உதவுவதாக.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.