YOU ARE NOT ALONE
“The Lord your God is with you.” Zephaniah3:17. We can struggle with thoughts and feelings that no one fully understands, even if we try to explain them. The battles we wage are often in the mind and heart, making them private and sometimes hidden. In our struggles, we may feel like we’re standing alone, facing an army determined to take us down. But Jesus knows our innermost thoughts. He knows and understands our struggles—all of them—and only He can keep us safe and secure. You are not alone, and you never will be. You can face each day with courage because God is with you. For Prayer-9176844644
நீங்கள் தனியாக இல்லை
“உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்.” செப்பனியா3:17. நாம் விளக்க முயற்சித்தாலும், யாருக்கும் முழுமையாக புரியாத எண்ணங்களுடனும் உணர்வுகளுடனும் நாம் போராடலாம். நாம் நடத்தும் போராட்டங்கள் பெரும்பாலும் மனதிலும் இருதயத்திலும் இருக்கிறது, அவை அவற்றை தனிப்பட்டதாகவும், சில நேரங்களில் மறைக்கப்பட்டதாகவும் ஆக்குகின்றன. நம்முடைய போராட்டங்களில், நம்மை வீழ்த்த தீர்மானத்தோடு இருக்கும் ஒரு படையை எதிர்கொண்டு, நாம் தனியாக நிற்பதுபோல் உணரலாம். ஆனால் இயேசு நம் உள்ளார்ந்த எண்ணங்களை அறிந்திருக்கிறார். அவர் நம் போராட்டங்களை—எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், புரிந்து கொள்ளுகிறார்—மேலும் அவர் மாத்திரமே நம்மை பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருக்க முடியும். நீங்கள் தனியாக இல்லை, ஒருபோதும் தனியாக இருக்கவும் மாட்டீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளையும் தைரியத்துடன் எதிர்க்கொள்ளலாம், ஏனென்றால் கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.