DAILY DIRECTION
“The Lord says, ‘I will guide you along the best pathway for your life. I will advise you and watch over you.’” Psalm32:8. Notice how God takes you down the best path: He puts desires in you, advises you, instructs you, and watches over you. You dont have to worry about missing your destiny. God has the wisdom, the guidance, and the direction we need, but it doesnt happen automatically. Every day, seek his guidance, surrender your ways, and consult with God. God knows what is best for you. He will not only keep you on the right path today, but He will keep you from making major mistakes. For Prayer-9176844644
அனுதின வழிகாட்டுதல்
“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” சங்கீதம்32:8. கர்த்தர் உங்களை எப்படி சிறந்த பாதையில் அழைத்துச் செல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: அவர் உங்களுக்குள் விருப்பங்களை வைக்கிறார், உங்களுக்கு அறிவுரை வழங்குகிறார், உங்களுக்கு அறிவுறுத்துகிறார் மற்றும் உங்களைக் கண்காணிக்கிறார். உங்கள் இலக்கை அடையாமல் போவதைக் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. கர்த்தரிடம் நமக்கு தேவையான ஞானம், வழிகாட்டுதல் மற்றும் வழியும் உள்ளது, ஆனால் அது தானாக நடக்காது. ஒவ்வொரு நாளும், அவருடைய வழிகாட்டுதலை நாடுங்கள், உங்கள் வழிகளை ஒப்புக்கொடுங்கள் மற்றும் கர்த்தரோடு கலந்தாலோசனை செய்யுங்கள். உங்களுக்கு எது சிறந்தது என்று கர்த்தர் அறிவார். அவர் உங்களை இன்றைக்கு சரியான பாதையில் வைப்பது மட்டுமல்ல, பெரிய தவறுகளை செய்வதிலிருந்தும் உங்களை பாதுகாப்பார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.