SPIRITUAL GROWTH
“You must grow in the grace and knowledge of our Lord and Savior Jesus Christ.” 2Peter3:18. Spiritual growth is not optional—it’s essential. As followers of Christ, we are called to continually grow in both the grace and knowledge of our Lord and Savior Jesus Christ. This means deepening our understanding of His love, His truth, and His purpose for our lives while allowing His grace to shape our character. Growth happens when we stay connected to Him through prayer, study, and obedience. Don’t settle for where you are today—press forward, learn more, and let His grace transform you every day. The more you grow, the stronger your faith and your impact become. For Prayer-9176844644
ஆவிக்குரிய வளர்ச்சி
“நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.” 2பேதுரு3:18. ஆவிக்குரிய வளர்ச்சி என்பது விருப்பத்திற்குரியதல்ல—அது அவசியமானது. கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நாம், நமது கர்த்தரும் இரட்சகரமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் தொடர்ந்து வளர அழைக்கப்படுகிறோம். அப்படியென்றால், அவருடைய அன்பு, அவருடைய சத்தியம் மற்றும் நம் வாழ்க்கைக்கான அவருடைய நோக்கம் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்துவதாகும், அதே நேரத்தில் அவருடைய கிருபை நம்முடைய குணத்தை வடிவமைக்க அனுமதிக்கிறதாகும். அவருடன் நாம் ஜெபத்தில், தியானத்தில் மற்றும் கீழ்ப்படிதலில் இணைந்திருக்கும்போது, வளர்ச்சி ஏற்படுகிறது. இன்று நீங்கள் இருக்கிற இடமே போதும் என்று இருந்துவிடாதீர்கள்—முன்னேறிச் செல்லுங்கள், இன்னும் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அவருடைய கிருபை ஒவ்வொரு நாளும் உங்களை மாற்ற அனுமதியுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக வளர்கிறீர்களோ, அவ்வளவு வல்லமையாக உங்கள் விசுவாசமும், உங்கள் தாக்கமும் மாறுகிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.