“By His wounds you are healed.” 1Peter2:24. Stop rehearsing the pain and start declaring the promise. You are not what happened to you; you are what God is doing through you. Healing is not just physical; it encompasses emotional, mental, and spiritual aspects as well. The enemy wants to convince you that you’ll always be damaged, but Jesus says, You’re already healed. You don’t have to wait for everything to look right to believe youre healed. Healing began the moment Jesus took your place. Receive it. Speak it. Walk in it. For Prayer-9176844644
குணமானீர்கள்
“அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.” 1பேதுரு2:24. வலியை மீண்டும் மீண்டும் சொல்வதை நிறுத்திவிட்டு, வாக்குறுதியை அறிக்கை செய்யத் தொடங்குங்கள். உங்களுக்கு நடந்ததை வைத்து நீங்கள் தீர்மானிக்கப் படுகிறதில்லை; கர்த்தர் உங்கள் மூலம் என்ன செய்கிறாரோ அதுதான் நீங்கள். குணப்படுத்துதல் என்பது சரீர ரீதியானது மட்டுமல்ல; அது உணர்ச்சி, மனம் சார்ந்த மற்றும் ஆவிக்குரிய அம்சங்களையும் உள்ளடக்கியது. நீங்கள் எப்போதும் சேதமடைந்தவர்களாக இருப்பீர்கள் என்று சத்துரு உங்களை நம்ப வைக்க பார்க்கிறான், ஆனால் இயேசு, நீங்கள் ஏற்கனவே குணமாகிவிட்டீர்கள் என்று கூறுகிறார். நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள் என்று நம்புவதற்கு எல்லாம் சரியாக இருப்பதாக தோன்றும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இயேசு உங்கள் இடத்தை எடுத்தபோதே குணப்படுத்துதல் தொடங்கிவிட்டது. அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைப் பேசுங்கள். அதிலே நடவுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.