EVERYTHING WILL BE FINE
“I will personally go with you, and I will give you rest—everything will be fine for you.” Exodus33:14. God said, “I will personally go with you,” which means you’re never walking into a meeting, a battle, a diagnosis, or a decision alone. His presence is your strategy, your strength, and your safety. That’s why you can lay down anxiety and pick up peace—He’s got you covered. Real rest doesn’t come from taking a break—it comes from knowing God is in control. Whatever you’re facing today, you can relax your grip and let God lead. He’s already worked it out, and yes—everything will be fine. For Prayer-9176844644
எல்லாம் சரியாகிவிடும்
“என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்.” யாத்திராகமம்33:14. கர்த்தர், நானே உங்களுடன் வருவேன் என்றார், அப்படியென்றால் நீங்கள் ஒருபோதும் ஒரு கூட்டத்திற்குள்ளோ, போராட்டத்திற்குள்ளோ, நோயறிதலிலோ அல்லது தீர்மானத்திலோ தனியாக நடக்கமாட்டீர்கள். அவருடைய பிரசன்னமே உங்கள் செயல் திட்டம், உங்கள் பெலன் மற்றும் உங்கள் பாதுகாப்பு. அதனால்தான், நீங்கள் பதட்டத்தை விட்டுவிட்டு சமாதானத்தை தேர்ந்தெடுக்கலாம்—அவர் உங்களை பாதுகாத்துள்ளார். உண்மையான இளைப்பாறுதல் ஓய்வெடுப்பதிலிருந்து வருவதில்லை, அது கர்த்தர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதை அறிவதிலிருந்து வருகிறது. இன்றைக்கு, நீங்கள் எதை எதிர்கொண்டு இருந்தாலும் சரி, உங்கள் பிடியை தளர்த்தி கர்த்தர் வழிநடத்த அனுமதியுங்கள். அவர் ஏற்கனவே செயல்படுத்தி வைத்துவிட்டார்—ஆம் எல்லாம் சரியாகிவிடும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.