GRATITUDE
“Give thanks in all circumstances; for this is God’s will for you in Christ Jesus.” 1Thessalonians5:18. God wants you to be intentional about your thankfulness every day. He wants you to develop this spiritual habit, one that is reflected in the life of a radical believer. You can thank God in every circumstance because He is in control. He can bring good out of evil. He can turn around the worst mistakes you’ve made. No matter what happens, God isn’t going to stop loving you. Gratitude always builds deeper relationships between you and other people and between you and God. For Prayer-9176844644
நன்றியுணர்வு
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” 1தெசலோனிக்கேயர்5:18. நீங்கள் ஒவ்வொரு நாளும் நன்றியுணர்வை பற்றி கவனமாக இருக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஒரு தீவிர விசுவாசியின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் இந்த ஆவிக்குரிய பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகிறார். கர்த்தர் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், நீங்கள் எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்கு நன்றி சொல்லலாம். அவரால் தீமையினின்று நன்மையை கொண்டு வர முடியும். நீங்கள் செய்த மோசமான தவறுகளையும் அவரால் மாற்ற முடியும். என்ன நடந்தாலும் சரி, கர்த்தர் உங்களை நேசிப்பதை நிறுத்தப் போவதில்லை. நன்றியுணர்வு எப்பொழுதும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே, மற்றும் கர்த்தருக்கும் உங்களுக்கும் இடையே ஆழமான உறவை உருவாக்குகிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.