AGAPE LOVE
“My unfailing love for you will not be shaken.” Isaiah54:10. God’s love is unlike any human love we experience. Even when we are overwhelmed by emotions or the challenges of life, His love never leaves us. He is near, with His arms open wide, ready to embrace you. His love doesn’t just tolerate your weaknesses—it transforms them. His grace fills the gaps left by pain and heals the broken places within you. Stand firm in this truth: God’s love is the foundation that empowers us to overcome every adversity and step into the fullness of His promises. For Prayer-9176844644
அகாபே (நிபந்தனையற்ற) அன்பு
“என் கிருபை உன்னைவிட்டு விலகாது.” ஏசாயா54:10. கர்த்தருடைய அன்பு நாம் அனுபவிக்கும் எந்த மனித அன்பையும் போன்றதல்ல. உணர்ச்சிகளால் அல்லது வாழ்க்கையின் சவால்களால் நாம் மூழ்கடிக்கப்பட்டாலும், அவருடைய அன்பு ஒருபோதும் நம்மை விட்டு விலகாது. அவர் தம்முடைய கரங்களை அகலமாய் விரித்து, உங்களை அரவணைத்துக்கொள்ள தயாராக உங்கள் அருகில் இருக்கிறார். அவருடைய அன்பு உங்கள் பெலவீனங்களை பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல—அவற்றை மாற்றவும் செய்கிறது. அவருடைய கிருபை வலியினால் ஏற்பட்ட இடைவெளிகளை நிரப்பி, உங்களுக்குள் உடைந்திருக்கும் இடங்களை சுகப்படுத்துகிறது. இந்த சத்தியத்தில் உறுதியாய் நில்லுங்கள்: கர்த்தருடைய அன்பு என்பது ஒவ்வொரு துன்பத்தையும் மேற்கொண்டு, அவருடைய வாக்குறுதிகளின் முழுமைக்குள் அடியெடுத்து வைக்க நமக்கு அதிகாரம் அளிக்கும் அடித்தளமாகும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.