DIVINE RELATIONSHIP
“My sheep listen to my voice; I know them, and they follow me.” John10:27. One amazing thing about the relationship between the Shepherd and His sheep is the deep connection that forms between them. Each day, we are bombarded by many voices, and at times, they can be overwhelming. But the Good Shepherd loves us, cares for us, and knows us by name. We hear His voice through His Word, found in the Bible. Daily, we should spend time in fellowship, prayer, and the study of His Word. It is there that we can be sure it is God who is speaking to us, and it is He who reveals Himself to us through His command to follow Him. For Prayer-9176844644
தெய்வீக உறவு
“என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது.” யோவான்10:27. மேய்ப்பருக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கிடையே உருவாகும் ஆழமான தொடர்பு. ஒவ்வொரு நாளும் நாம் பல காரியங்களால் தாக்கப்படுகிறோம், சில சமயங்களில் அவை மூழ்கடிக்கிறதாக இருக்கிறது. ஆனால் நல்ல மேய்ப்பர் நம்மை நேசிக்கிறார், கவனித்துக் கொள்கிறார், மேலும் பெயர் சொல்லி அறிந்திருக்கிறார். வேதத்தில் காணப்படும் அவருடைய வார்த்தையால் அவருடைய குரலைக் கேட்கிறோம். தினமும் நாம் ஐக்கியத்திலும், ஜெபத்திலும், அவருடைய வார்த்தையை தியானிப்பதிலும் நேரத்தை செலவிட வேண்டும். இங்குதான் நாம் நம்மோடு பேசுவது கர்த்தர்தான் என்பதில் உறுதியாகவும், அவரை பின்பற்றுவதற்கு அவருடைய கட்டளையின் மூலம் அவரே தம்மை வெளிப்படுத்துகிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.