PURE HEART
“Create in me a pure heart, O God, and renew a steadfast spirit within me.” Psalm51:10. A pure heart is a heart free from doubt, fear, unforgiveness, and wrong motives. It’s a heart fully aligned with God’s will and His Kingdom. When your heart is pure, your faith works unhindered, and nothing will be impossible for you. A steadfast spirit refuses to quit—no matter the pressure, no matter the delay. This is the spirit of faith that holds onto God’s promises until they manifest. Remember, God doesn’t just want to clean up the outside; He wants to transform you from the inside out so you can fulfill your assignment and walk in victory every day. For Prayer-9176844644
சுத்தமான இருதயம்
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” சங்கீதம்51:10. ஒரு சுத்த இருதயம் என்பது சந்தேகம், பயம், மன்னிக்கமுடியா தன்மை மற்றும் தவறான நோக்கங்கள் இல்லாத இருதயமாகும். அது கர்த்தரின் சித்தத்துடனும், அவருடைய ராஜ்ஜியத்துடனும் முழுமையாக இணைந்துள்ள இருதயம். உங்கள் இருதயம் தூய்மையாக இருக்கும்போது, உங்கள் விசுவாசம் தடையின்றி செயல்படுகிறது, எதுவும் உங்களுக்கு சாத்தியமற்றதாக இருக்காது. ஒரு நிலைவரமான ஆவி அழுத்தம் இருந்தாலும், தாமதமானாலும் விட்டுக்கொடுக்க மறுக்கிறது. கர்த்தருடைய வாக்குறுதிகள் வெளிப்படும்வரை, அவற்றை பிடித்துக் கொள்ளும் விசுவாசத்தின் ஆவிதான் இது. நினைவில் கொள்ளுங்கள், கர்த்தர் வெளிப்புறத்தை மட்டும் சுத்தம் செய்ய விரும்பவில்லை; நீங்கள் உங்கள் வேலையை நிறைவேற்றவும், ஒவ்வொரு நாளும் வெற்றியில் நடக்கவும் உங்களை உள்ளுக்குள்ளிருந்து மாற்ற அவர் விரும்புகிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.