TAKE THE CONTROL BACK
“Do not be overcome by evil, but overcome evil with good.” Romans12:21. You never overcome disrespect with more disrespect. You never move forward by doing to others the wrongs they did to you. It tests your character. You can’t control how everyone treats you, but you can control how you respond. Choose to do what is right and stay in peace, knowing that God is with you in every battle. When you take the high road, you’ll not only enjoy greater peace, but you’ll also grow in character and become someone God can use to influence and bless others. For Prayer-9176844644
கட்டுப்பாட்டை திரும்ப எடுத்துக்கொள்
“நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” ரோமர்12:21. அவமதிப்பை இன்னும் அதிக அவமதிப்பால் ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. மற்றவர்கள் உங்களுக்கு இழைத்த தீமைகளையே நீங்களும் அவர்களுக்குச் செய்வதன் மூலம் ஒருபோதும் முன்னேற முடியாது. அது உங்கள் குணத்தை சோதிக்கும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கிறீர்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு போராட்டத்திலும் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதை அறிந்து, சரியானதைச் செய்யவும் அமைதியைக் காக்கவும் தேர்ந்தெடுங்கள். நீங்கள் மேலானப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, மிகுந்த மனஅமைதியை அடைவது மட்டுமல்லாமல், உங்கள் குணத்தில் வளர்ந்து, மற்றவர்களை சாதகமாக வழிநடத்தவும் ஆசீர்வதிக்கவும் கர்த்தர் பயன்படுத்தக்கூடிய ஒரு நபராக மாறுவீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.